தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பிளிப்கார்ட், அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க வருகிறது ஜியோமார்ட்! - business news in tamil

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் அங்கமான ஜியோ தளத்தின் மூலம் ஃபிளிப்கார்ட், அமேசான் இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு போட்டியாக ஜியோ மார்ட் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

jiomart
jiomart

By

Published : May 24, 2020, 7:51 PM IST

டெல்லி: அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை ஜியோமார்ட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2 மாதங்களுக்கு முன்பு வீழ்ச்சியடைந்தது. கச்சா எண்ணெய் பொருட்களின் விலை சரிவால் இந்த வீழ்ச்சியை அந்நிறுவனம் சந்தித்தது.

இந்தச் சரிவை ஈடு செய்வதற்காக புதிய வியாபாரத்தை தொடங்க நினைத்த ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ மூலம் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் விற்பனை செய்து, அதனை வீடுதோறும் டெலிவரி செய்யும் திட்டத்தை மும்பையில் அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து 10 பில்லியன் டாலரை முதலீடு செய்தன. இதைத்தொடர்ந்து ஜியோமார்ட் தொடர்பான அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். ஆனால் இணையத்தில் அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரி சேவை எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படாமல் இருந்தது.

இச்சூழலில் கரோனா ஊரடங்கு முடிவதற்குள் அத்தியாவசியப் பொருட்களின் டெலிவரி சேவையை ஜியோமார்ட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக இந்தியாவின் 200 நகரங்களில் இந்தச் சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது.

இணையத்தில் பதிவு செய்தால் வீட்டிற்கு வந்து இலவச டெலிவரி கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜியோமார்ட்டின் சேவை அமலுக்கு வந்ததும் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் உள்ளூர் கடைகளின் விற்பனைக்கு கடும் போட்டி இருக்கும் எனப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details