இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றன. இதனால், இந்திய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துவருகின்றன.
குறிப்பாக, இன்று ஒரே நாளில் தேசிய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.97 விழுக்காடு வரை ஏற்றம் கண்டு 1938.30 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதேபோல தேசிய பங்குச்சந்தையிலும் 3.23 விழுக்காடு வரை ஏற்றம் கண்ட ரிலையன்ஸ் நிறுவநத்தின் பங்குகள் 1,938.70 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 12 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைக் கொண்ட முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுத்துள்ளது.