தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

புதிய புரட்சியை ஏற்படுத்துமா... 70 இன்ச் பிரமாண்ட ரெட்மி டிவி! - Xiaomi redmi TV

சீனா: சியோமி நிறுவனம் ஸ்மாட் டிவி துறையில் தனது அடுத்த படைப்பாக 70 இன்ச் பிரமாண்ட திரையில் ரெட்மி டிவியை அறிமுகம் செய்யப் போகிறது

ரெட்மி டிவி

By

Published : Aug 19, 2019, 11:06 PM IST

உலகில் சியோமி நிறுவனத்தை அறியாதோர் யாருமே இருக்க முடியாது. கைப்பேசி துறை மட்டுமின்றி பல்வேறு துறையில் எம்.ஜ, ரெட்மி பிராண்ட், தனக்கென்று தனி அடையாளத்தைப் பதித்துள்ளது. சமீப காலங்களாக சியோமி நிறுவனம் ஸ்மார்ட் டிவி பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சியோமியின் எம்.ஐ டிவி ஸ்மார்ட் டிவி பிரிவிலேயே குறைந்த விலையில் விற்பனை செய்வதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டில், அடுத்த படைப்பாக ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது. ஸ்மார்ட் டிவி துறையில் அதிக விற்பனை செய்யப்பட்ட எம்.ஐ டிவியை 70 இன்ச் பிரமாண்ட திரையைக் கொண்டுள்ள ரெட்மி டிவி துவம்சம் செய்யுமா என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

ABOUT THE AUTHOR

...view details