கைப்பேசி துறையில் திடீர் புரட்சியை ஏற்படுத்திய ரியல்மி நிறுவனம், தனது புதியப் படைப்புகளால் பயனாளர்கள் கவர்ந்து வருகிறது. ரியல்மி செல்போன்களை மக்கள் அதிகளவில் உபயோகிக்கவும் தொடங்கியுள்ளனர்.
ரியல்மியின் அடுத்த படைப்பான Narzo சீரிஸ் செல்போன்கள் ஏற்கனவே மார்ச் 26ஆம் தேதியும், ஏப்ரல் 21ஆம் தேதி அறிமுகம் செய்ய தயாராக இருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்காலிமாக ஒத்திவைத்தனர். இந்நிலையில், ரியல்மி தலைமை நிர்வாக அலுவலர் மாதவ் ஷெத், தனது ட்விட்டர் பக்கத்தில் " ரியல்மியின் Narzo சீரிஸ் செல்போன்கள் மே 11ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்