ஓப்போவின் இணை நிறுவனமாக தொடங்கப்பட்ட ரியல்மி நிறுவனத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, விரைவிலேயே ரியல்மி தனி நிறுவனமாக செயல்படத் தொடங்கியது. ரியல்மி செல்போன்களை மக்கள் அதிகளவில் உபயோகிக்கவும் தொடங்கினர்.
கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகளைத் தவிர, மற்ற அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மொபைல் ஷோரூம் மூடப்பட்டிருந்தாலும், ஆன்லைன் விற்பனை இருந்த காரணத்தினால் ரியல்மி நிறுவனம் நர்சோ 10, நர்சோ 10 ஏ ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 21ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என ட்விட்டரில் முன்பு பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், ரியல்மி தலைமை நிர்வாக அலுவலர் மாதவ் ஷெத் தனது ட்விட்டரில், "இ காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்கள் வழங்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தைத் தொடர்ந்து, சுவாரஸ்யமான அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட நர்சோ 10, நர்சோ 10ஏ ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் ஒத்திவைக்கப்படுகிறது" எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க:புதிய ஜாப்ரா எவால்வ்2 ஹெட்செட் வகைகள்... விலை ரூ.15,831 முதல்