ரியல்மி நிறுவனம் ரியல்மி 5i என்ற ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டது. 6.52 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 655 பிராசஸர், நான்கு கேமராக்கள் என்று அட்டகாசமான வசதிகளுடன் வெளியான இந்த ஸ்மார்ட்போன், ரியல்மி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம், ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியது. இதன் காரணமாக, 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஊரடங்கால் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் உள்ளிட்டவற்றால் இந்த ஸ்மார்ட்போனின் விலை மேலும் 1000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 8,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது 10,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 4 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட வேரியண்ட்டின் விலையும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு 11,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி 5i சிறப்புகள்
- 6.52 இன்ச் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 655 பிராசஸர்
- பின்புறம் 12 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 8 மெகாபிக்சல் கேமரா
- 5000mah பேட்டரி