தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஸ்னாப் டிராகனின் புதிய பிராசஸர் வெளியீடு! - ஸ்னாப்டிராகன் 865 பிளஸ்

வாஷிங்டன்: அதிவேக சார்ஜிங், சிறப்பான கேமிங், அதிநவீன கிராபிக்ஸ் ஆகியவற்றுக்காக ஸ்னாப் டிராகன் 865 பிளஸ் என்ற புதிய பிராசஸரை வெளியிட்டுள்ளது.

Snapdragon 865 Plus
Snapdragon 865 Plus

By

Published : Jul 10, 2020, 2:56 PM IST

சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுக்கு முதல் விருப்பமாக இருக்கும் பிராசஸர் ஸ்னாப் டிராகன்தான். கடந்த சில ஆண்டுகளாக, மீடியாடெக் நிறுவனம் கடும் போட்டியை தந்துவந்தாலும், ஸ்னாப் டிராகன் இருக்கும் இடத்தை மீடியா டெக்கால் நெருங்க முடியவில்லை.

இந்நிலையில், தனது ப்ரீமியம் பிராசஸர் செக்மென்டான 8 சீரிஸில் ஸ்னாப் டிராகன் நிறுவனம் புதிய பிராசஸரை தற்போது வெளியிட்டுள்ளது. அதிவேக சார்ஜிங், 5ஜி வசதி, சிறப்பான கேமிங், அதிநவீன கிராபிக்ஸ் ஆகியவற்றை எளிதில் கையாளக்கூடிய ஸ்னாப் டிராகன் 865 பிளஸ் என்ற புதிய பிராசஸரை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இது குறித்து குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும், பொது மேலாளருமான அலெக்ஸ் கூறுகையில், "5 ஜி தொழில்நுட்பத்திற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கும் இந்தச் சூழ்நிலையில், ​​எங்கள் பிரீமியம் செக்மென்ட் பிராசஸரான 8-சீரியஸ் சிப்செட்களில் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறோம்.

ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் சிறப்பம்சங்கள்

செயல்திறன், குறைவான மின்சார பயன்பாடு, அடுத்த தலைமுறை கேமரா, ஏஐ கேமிங் அனுபவங்களை வழங்க இந்த செயலி மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

ஸ்னாப் டிராகன் 865 பிராசஸருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது நாங்கள் புதிய ஸ்னாப் டிராகன் 865 பிளஸ் என்ற பிராசஸரை வெளியிடுகிறோம். இது அடுத்த தலைமுறை முன்னணி ஸ்மார்ட் போன்களுக்கு மேம்பட்ட செயல்திறனை வழங்கும்” என்றார்.

இந்த புதிய ஸ்னாப் டிராகன் 865 பிளஸ் பிராஸசரைக் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட் போனாக ஆசஸ் நிறுவனத்தின் ROG போன் 3 மாடல் இருக்கும். கேமிங்களுக்காவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் திரும்பும் வரலாறு - டாடா கைக்கு திரும்பச் செல்லும் மகாராஜா!

ABOUT THE AUTHOR

...view details