கரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் 23ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும், மே 6ஆம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இதே திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் சிலவும் விமானங்களை இயக்கின.
ஏர் இந்தியா நிர்ணயித்த கட்டணமே இறுதியானது - விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்
டெல்லி: ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இயங்கும் சர்வதேச விமானங்களுக்கு பயண முகவர்கள் மூலம் டிக்கெட் புக் செய்பவர்கள், ஏர் இந்தியா நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் பணம் செலுத்தத் தேவையில்லை என பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இயங்கும் சர்வதேச விமானங்களுக்கு பயண முகவர்கள் மூலம் டிக்கெட் புக் செய்பவர்கள், ஏர் இந்தியா நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் பணம் செலுத்தத் தேவையில்லை. பயண முகவர்கள் அதிக கட்டணம் வசூல் செய்தால், gmsm@airindia.in என்ற தளத்துக்கு உங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
ஜூலை 16ஆம் தேதி அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சர்வதேச சிறப்பு விமானங்களை இயக்க இந்தியா ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.