சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொது வாடிக்கையாளர்கள் தங்குவதற்காகத் தொடங்கப்பட்ட விடுதி நிறுவனமான ஓயோ, தற்போது 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 500 நகரங்களில் கால் பதித்துள்ளது. உலகின் முன்னணி விடுதி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள ஓயோ, தற்போது ஜப்பானிலும் தனது தடத்தைப் பதிக்கவுள்ளது.
ஜப்பானில் தடம்பதிக்கும் ஓயோ நிறுவனம்! - சாப்ட்பேங்க்
இந்தியாவின் மிகப்பெரிய தங்கும்விடுதி நிறுவனமான ஓயோ, ஜப்பானின் சாஃப்ட் பேங்க் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய நிறுவனத்தை ஜப்பானில் தொடங்கவுள்ளது.
![ஜப்பானில் தடம்பதிக்கும் ஓயோ நிறுவனம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2909453-thumbnail-3x2-oyo.jpg)
ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட்பேங்க் நிறுவனத்துடன் கைகோர்த்து தனது புதிய நிறுவனக் கிளைகளை ஜப்பான் நகரங்களில் தொடங்கவுள்ளது. இது குறித்து ஓயோ நிறுவனத்தின் நிறுவனர் ரிதேஷ் அகர்வால், 'ஜப்பான் ஆசியாவில் வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா நாடாகும். சிறப்பான வாய்ப்பும், வளர்ச்சியும் கொண்ட ஜப்பானில் சேவையைத் தொடங்க எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சி அடைகிறது' என்றார்.
ஓயோ ஹோட்டல்ஸ் 'ஜப்பான் ஜீ.கே.' என்ற பெயரில் தொடங்கப்படும் இந்நிறுவனத்தை ப்ரசூன் சவுத்ரி தலைமையேற்று வழிநடத்துவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.