பிரபல சீன கைப்பேசி நிறுவனமான ஓப்போ, தனது அடுத்த படைப்பான ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனுக்காக ஐரோப்பிய ஒன்றிய அறிவுசார் சொத்து அலுவலகத்துடன் (European Union Intellectual Property Office) இணைந்து புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு முடிவு செய்துள்ளனர். இதை ரெனோ க்ளோ (Reno Glow) என்றும் அழைக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செல்போன் குறித்த தெளிவான விவரங்கள் வெளிவரவில்லையென்றாலும், இணையத்தில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ரெனோ க்ளோ செல்போனில் குரல் மூலமாக கட்டுப்படுத்தும் புதிய கேமரா தொழில் நுட்பம் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், க்ளோ செல்போன்களில் QHD டிஸ் ப்ளேக்களில் காட்சிகள் தரம் சிறப்பு வாய்ந்ததாகவும், அதிகபட்ச பிரகாசத்துடனும் இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.