தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நொய்டா தொழிற்சாலையில் இயக்கத்தை நிறுத்தியது ஒப்போ! - ஒப்போ நிறுவனம் கரோனா

ஊழியர்கள் 6 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைபேசி தயாரிப்பு நிறுவனமான ஒப்போ டெல்லியில் உள்ள தனது தொழிற்சாலையை மூடியுள்ளது. மேலும், 3000 ஊழியர்களுக்கு கரோனா நோய்க் கிருமித் தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டுள்ளது.

oppo corona
oppo corona

By

Published : May 18, 2020, 1:28 PM IST

Updated : May 18, 2020, 3:05 PM IST

டெல்லி: ஊழியர்கள் 3000 பேருக்கு நோய்க் கிருமித் தொற்று சோதனை முடிவுகளுக்குப் பின், தொழிற்சாலையை இயக்க ஒப்போ நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

இது தொடர்பாக ஒப்போ இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்களின் அனைத்து ஊழியர்கள், குடிமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கும் அமைப்பாக, நொய்டாவில் உள்ள எங்கள் உற்பத்தி ஆலையில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளோம்.

சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் படையெடுக்கும் நிறுவனங்கள்!

மேலும் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கரோனா நோய்க் கிருமி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளை தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் இருந்து தனது உற்பத்தி நடவடிக்கைகளை ஒப்போ நிறுவனம் மீண்டும் தொடங்கியது

Last Updated : May 18, 2020, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details