ஒப்போ நிறுவனம் தனது அடுத்த படைப்புகளான ஒப்போ A9 2020, A5 2020 செல்போன்கள் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒப்போ A9 2020 ஸ்மார்ட்போன் வரும் 16ஆம் தேதியும், ஒப்போ A5 2020 ஸ்மார்ட்போன் வரும் 21ஆம் தேதியும் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது
ஒப்போ நிறுவனத்தின் புதிய செல்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது
ஒப்போ A9 2020 முக்கிய அம்சங்கள்
- 6.5 இன்ச் டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 9 பை
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 ப்ராஸசர் (Qualcomm Snapdragon 665 SoC)
- 128 ஜிபி சேமிப்பு வசதி
- 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-கேமரா, 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் ஷூட்டர், 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளிட்ட நான்கு பின்புற கேமராக்கள்
- 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- 5000 mah பேட்டரி
ஒப்போ A5 2020 முக்கிய அம்சங்கள்
- 6.5 இன்ச் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராஸசர் (Qualcomm Snapdragon 665 SoC)
- ஆண்ட்ராய்டு 9 பை
- 64 ஜிபி சேமிப்பு வசதி
- 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-கேமரா, 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் ஷூட்டர், 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளிட்ட நான்கு பின்புற கேமராக்கள்
- 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- 5000 mah பேட்டரி
ஒப்போ A9 2020 செல்போனின் 4 ஜிபி மாடல் ரூ. 16,990, 6ஜிபி மாடல் ரூ. 19,990 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்போ A5 2020 செல்போனின் 3ஜிபி ரேம் மாடல் ரூ. 12,490, 4ஜிபி ரேம் மாடல் 13,990 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.