உலகில் பல மக்கள் ஒன் பிளஸ் நிறுவனத்தின் சாதனங்களை உபயோகிப்பதை பெருமையாக கருதுகின்றனர்.மேலும் அந்நிறுவனத்தின் செல்போன்கள் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
ரெட்மியுடன் மோதும் ஒன் பிளஸ்!!! - One plus tv will launch on september
பீஜிங்: ஒன் பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பான ஒன் பிளஸ் டிவியை இந்தியாவில்தான் முதன்முதலில் அறிமுகம் செய்யப்போவதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒன் பிளஸ் நிறுவனத்திற்கும் இந்திய வினியோகஸ்தர்களுக்கும் நல்ல உறவு அமைந்துள்ளதால் முதன்முதலாக ஒன் பிளஸ் டிவியை இந்தியச் சந்தையில்தான் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்போவதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார். ஒன் பிளஸ் டிவியை வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா நகரங்களிலும் விரைவில் அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒன் பிளஸ் டிவியின் திரை 75 இன்ச் உடையது என தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் பிரமாண்ட 70 இன்ச் ரெட்மி டிவியும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள ஒன் பிளஸ் டிவியும் சரி சமமாகப் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது
TAGGED:
70 இன்ச் ரெட்மி டிவி