ஓலா நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Etergo எனும் நெதர்லாந்து நிறுவனத்தை வாங்கியது. அந்நிறுவனத்தின் Etergo Appscooter மாடலை மையமாக வைத்து, சிறிய மாற்றங்களுடன் புதிய இ-ஸ்கூட்டரை தமிழ்நாட்டில் உள்ள ஓலா எலெக்டரிக் தொழிற்சாலையில் தயாரித்து வந்தது.
இந்த வாகனம் சோதனை ஓட்டம் முடிந்து விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதன் புக்கிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
வெறும் 499 ரூபாய் தொடங்கப்பட்ட அதன் புக்கிங்குக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புக்கிங் தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், சுமார் ஒரு லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக ஓலா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களது முதல் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு, இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக அளவில் வரவேற்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
24 மணி நேரத்தில் ஒரு லட்சம் புக்கிங் மக்கள் புக்கிங் எண்ணிக்கையைப் பார்க்கையில், எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கிப் படையெடுப்பது தெளிவாகத் தெரிகிறது. எங்கள் ஸ்கூட்டரை புக் செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆரம்பம் மட்டுமே" எனக் குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ள இந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், எலெக்ட்ரிக் வாகனத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:இந்தியாவில் 20 லட்சம் கணக்குகள் முடக்கம்... வாட்ஸ்அப் அதிரடி!