மத்திய அரசு வகுத்துள்ள புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏ.ஜி.ஆர்.) தொகையில் குறிப்பிட்ட பங்கை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.
இந்தக் கொள்கைக்கு உடன்படாமல் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், நிறுவனங்கள் தொகையைச் செலுத்த வேண்டும் என கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை மீறும் பட்சத்தில் இது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்தப் பங்குத் தொகையைச் செலுத்த கூடுதல் கால அவகாசம் தேவை என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முறையீடு செய்திருந்தன.