தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீட்டு தொகையால் நியூ இந்தியா நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை!

பொது துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 170 ஏர் இந்திய விமானங்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இச்சூழலில், கோழிக்கோடு விமான விபத்தில் செலவழிக்கப்படும் காப்பீட்டு தொகையினால் நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

new india assurance
நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம்

By

Published : Aug 9, 2020, 2:41 PM IST

சென்னை: கோழிக்கோடு விமான விபத்தில் செலவழிக்கப்படும் காப்பீட்டு தொகையினால் நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகிய நான்கு பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் தான் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 ரக விமானத்தின் முதன்மை காப்பீட்டாளர்கள் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

கோழிக்கோடு விமான விபத்து

விபத்தை சந்தித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 5 கோடி ரூபாய் காப்பீடு கட்டணம் செலுத்தியுள்ளது. ஏர் இந்தியா மாறுபட்ட மதிப்புகளைக் கொண்ட வெவ்வேறு விமானங்களைக் கொண்டுள்ளது. இந்த காப்பீடானது முன்றாம் தர பயணிகள் உள்பட அனைத்தையும் சேர்ந்ததாகும்.

"விமானத்தைப் பொறுத்தவரை இது இப்போது மொத்த இழப்பாகும். உரிமைகோரல் தொகை ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்பாக இருக்கும். தவிர, மீட்பு மற்றும் பிற கட்டணங்கள் குறித்த உரிமைகோரல்கள் இருக்கும்" என்று அலுவர்கள் கூறியுள்ளனர்.

இருமுறை கைவிடப்பட்ட தரையிறங்கும் முயற்சி... 3ஆவது முறை நிகழ்ந்த பெரும் விபத்து!

இருப்பினும், நான்கு காப்பீட்டாளர்களின் கூட்டமைப்பிற்கான நேரடி உரிமைகோரல் விமானத்தின் மதிப்பில் சுமார் 10 விழுக்காடு மட்டுமே இருக்கும். இது பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details