தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கலக்க வருகிறது வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்ஸ்! - வாட்ஸ்அப்

டெல்லி: வாட்ஸ்அப் நிறுவனம் தனது அடுத்த அப்டேட்டில் பல்வேறு அனிமேஷன் ஸ்டிக்கர்ஸ் உள்ளிட்ட வசதிகளை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.

Whatsapp
WhatsApp

By

Published : Jul 2, 2020, 7:22 PM IST

உலகளவில் பிரபலமான வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு அம்சங்களை இணைந்து மக்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளது. வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் வருமா என்று ஏங்கிக் கொண்டிருந்த பயனர்களுக்காக நான்கு புதிய வசதிகளை புதிய வெர்ஷனில் வாட்ஸ்அப் வழங்கவுள்ளது.

இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய வெர்ஷனில் பல வகையான அனிமேஷன் ஸ்டிக்கர்ஸ், கியூஆர் குறியீடு, 8 பேர் பேசும் வீடியோ காலில் புதிய மேம்பாடுகள், வாட்ஸ்அப் டார்க் மோடை கணினியிலும் பயன்படுத்தும்" வசதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வெர்ஷன் விரைவில் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details