அமேசான் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான "அமேசான் அலெக்சா ஸ்மார்ட் ஸ்பீக்கர்" உதவியால் மக்கள் இருந்த இடத்திலேயே பல வேலைகளை எளிதாக செய்ய முடிந்தது. இந்நிலையில் உலக நாய்கள் தினத்தையொட்டி அமேசான் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் நாய் சோகமாக இருக்கும்பட்சத்தில் சரி செய்யும் விதமாக அலெக்சா ஸ்பீக்கர் தானாகவே இசையை இசைக்கும்.
செல்லப் பிராணியை குஷிப்படுத்த அமேசான் புதிய கண்டுபிடிப்பு - Amazon Alexa Smart speaker
அலெக்சா ஸ்பீக்கரில் நாய்களை உற்சாகம் செய்யும் புதிய வசதியை அமேசான் அறிமுகம் செய்துள்ளது.
அலெக்சா
இந்த வசதியைப் பயனாளர்கள் தொடங்குவதற்கு "அமேசான் ஓபன் பப்பி ஜேம்ஸ்" என்று உச்சரிக்க வேண்டும். இதனையடுத்து நமது செல்லப் பிராணியின் மனநிலைமையை பொறுத்து சந்தோஷம், சோகம், தனிமை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் நடக்கவேண்டியதை அலெக்சா ஸ்பீக்கர் பார்த்துக்கொள்ளும். இந்த கண்டுபிடிப்பால் மனிதர்கள் நாயுடன் விளையாடி மகிழ்ந்த காலம் சென்று அலெக்சா மகிழ்ச்சியாகப் பார்த்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது