கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முத்தூட் நிறுவனம், தங்க நகைக் கடன் வழங்குவதில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது, இந்த நிறுவனம் குறித்து மதிப்பீடு ஒன்றை மூடீஸ், ஃபின்ஞ் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டிருக்கிறது. அதில் நிறுவனத்தின் மதிப்பீடு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள இந்நிறுவனங்கள், முத்தூட் நிறுவனம் கொண்ட கடன் இலக்கும், அதன் சந்தை அளவுமே இந்த மதிப்பீட்டுக்கான காரணம் எனத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ், மூன்று உலகத் தர குறியீடு நிறுவனத்திடம் இருந்து நல்ல மதிப்பீடைப் பெற்றுள்ளது. செப்டம்பரில் இந்த நிறுவனத்துக்கு எதிரான ஊழியர்களின் போராட்டம் தீவிரமானதால், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், இடுக்கி, பாலக்காடு பகுதிகளைச் சேர்ந்த 15 கிளைகளை மூடுவதாக முத்தூட் நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.