டெல்லி: வரலாற்றில் இடம்பெற்று வெள்ளிவிழா கண்ட 2ஜி சேவையை நிறுத்த அரசு அவசர கொள்கை முடிவுகள் மேற்கொள்ளவேண்டும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது 2ஜி சேவையை 30 கோடி சந்தாதாரர்கள் அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை இணைய சேவையை கூட அனுபசிக்க முடியாத சூழல் உள்ளது. ஆனால் இந்தியாவும், உலக நாடுகளும் 5ஜி சேவையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது என்று கூறினார்.
இந்திய அரசு அவசர கொள்கை முடிவுகளை எடுக்கும் நேரமிது. 2ஜி சேவையை வரலாற்றில் பொறித்து விட்டு, அதனை முழுவதுமாக தடைசெய்து புதிய தொழில்நுட்பங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
வருகிறது வாட்ஸ்அப் பே: ஜியோவுடன் சேர்ந்து போட்டி நிறுவனங்களை துவம்சம் செய்ய திட்டம்!
2ஜி சேவையில் உள்ள 30 கோடி பயனாளர்களுக்கு அடிப்படை இணைய சேவைகள் மூலம் தங்கள் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள அது உதவும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.