சீன செல்போன் நிறுவனங்கள் குறைவான விலையில் அதிக வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால், அதேசமயம் கிளாஸாக எதிர்பார்க்கும் பயனர்களுக்காக அறிமுகமாகும் செல்போன்களின் விலையும் தாறுமாறாக இருக்கும். ஆகையால், இத்தகைய செல்போன்கள் மினி பீஸ்டாகவே கருதப்படுகின்றன.
எப்போதும் சைலன்டாக செல்போன்களை வெளியிடும் மோட்டோரோலா நிறுவனம், தனது அடுத்த படைப்பாக மோட்டோரோலா Edge+ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செல்போனின் விற்பனை விலை 74 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.