நம் தொடர்பு எண்ணை மாற்றாமலேயே, வேறு நிறுவனத்தின் நெட்வொர்க்கிற்கு இணைப்பை மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் எம்.எம்.பி எனப்படும் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி. ஆனால், இதில் சில காலதாமதம் ஏற்படும் சூழல் இருந்தது. இனி வெறும் மூன்று நாட்களில், மொபைல் நெட்வொர்க்கை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதுதொடர்பான அறிவிப்பை இந்தியத் தொலைத்தொடர்பு ஆணையம் டிராய் வெளியிட்டுள்ளது.
முன்பு எந்த நெட்வொர்க்கில் இருந்து வேண்டுமானாலும் நமக்குப் பிடித்த நெட்வொர்க்கிற்கு நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மட்டும் மாற்ற (மொபைல் போர்ட்டபிலிட்டி) 7 நாட்களிலிருந்து 15 நாட்கள் ஆகும். ஆனால், தற்போது வரும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் வெறும் மூன்று நாட்களில் நமக்குப் பிடித்த நெட்வொர்க்கிற்கு சுலபமாக மாறலாம் என டிராய் தெரிவித்துள்ளது.