தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மைக்ரோசாஃப்டின் தலைவரானார் சத்யா நாதெள்ளா!

சிஇஓவாக இருந்த சத்யா நாதெள்ளா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

By

Published : Jun 17, 2021, 12:21 PM IST

Satya Nadella
சத்யா நாதெள்ளா

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக சிஇஓ சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு, சிஇஓ-ஆக பொறுப்பேற்ற அவர், லிங்க்ட்இன் (LinkedIn), நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (Nuance Communications), ஜெனிமேக்ஸ் (ZeniMax) போன்ற பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்களை வாங்கி, நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.

சத்யா நாதெள்ளா

2020இல் மைக்ரோசாஃப்ட் குழுவிலிருந்து பில் கேட்ஸ் விலகியதன் காரணமாகவே, இந்த மாற்றம் வந்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், நாதெள்ளா தனது ட்விட்டர் பயோவில் மைக்ரோசாஃப்டின் சிஇஓ மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'இஸ்ரேலில் மீண்டும் தாக்குதல்' - போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க ஐ.நா. அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details