தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மைக்ரோசாஃப்ட்டின் சர்ஃபேஸ் சீரிஸ்... கலக்கல் அறிமுகங்கள்! - சர்ஃபேஸ் கோ 2 சிறப்பு அம்சங்கள்

சான் பிரான்சிஸ்கோ: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் புக் 3, சர்ஃபேஸ் கோ 2, சர்ஃபேஸ் இயர்பட்ஸ் சாதனங்கள் ஓரிரு மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

dsd
ds

By

Published : May 8, 2020, 11:45 AM IST

கணினி துறையில் தனக்கென்று தனி இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வைத்துள்ளது. புதிய படைப்புகள் மூலம் பயனாளர்களை தக்க வைத்துள்ள அந்நிறுவனம், புதிய சர்ஃபேஸ் சாதனங்களான சர்ஃபேஸ் புக் 3, சர்ஃபேஸ் கோ 2, மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ், மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஹெட்ஃபோன்கள் 2 ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், " சர்ஃபேஸ் கோ 2 விலை $ 399 ஆகவும், சர்ஃபேஸ் புக் 3 விலை $1599 ஆகவும், சர்ஃபேஸ் ஹெட்ஃபோன்கள் 2 விலை $ 249 ஆகவும், சர்ஃபேஸ் இயர்பட்ஸ் விலை $ 199 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் மே 12 ஆம் தேதி விற்பனைக்கு வரப்படும்.

சர்ஃபேஸ் கோ 2 சிறப்பு அம்சங்கள்:

  • 10.5 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்பிளே 10.5-inch PixelSense display
  • அதீத பேட்டரி திறன்
  • 8 ஆவது ஜென்ரேஷன் இன்டெல் கோர் எம் (8th Generation Intel Core M)

சர்ஃபேஸ் புக் 3 சிறப்பு அம்சங்கள்:

  • 13 இன்ச் அல்லது 15 இன்ச் டிபிஐ பிக்சல்சென்ஸ் டிஸ்பிளே (13-inch or 15-inch high-DPI PixelSense Display)
  • 10th ஜென்ரேஷன் இன்டெல் கோர் பிராசசர் (10th Generation Intel Core processors)
  • 32 ஜிபி ரேம்

மேலும், சர்ஃபேஸ் டாக் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பாஸ்ட் சார்ஜிங் வசதியும், மல்டி போர்ட் மைக்ரோசாஃப்ட் யூ.எஸ்.பி-சி டிராவல் ஹப் ஆகியவை அடங்கியுள்ளது. இதன் விலை, $ 259.99 ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க:ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கும் கோடாக் மகேந்திரா!

ABOUT THE AUTHOR

...view details