உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாப்ட்வேர்களுக்கு எப்போதும் தனி மவுசுஉண்டு. கணினியை உபயோகித்து வரும் பலரும், வேர்ட் சாப்டவேரில் பலர் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், வேர்ட் சாப்ட்வேரில் டெக்ஸ்ட் பிரடிக்ட் ( text predict) வசதியை மார்ச் மாதம் அறிமுகம் செய்திட மைக்ரோசாப்ட முடிவு செய்துள்ளது. இது கூகுள் டாக்ஸில் உள்ள ஸ்மார்ட் கம்போஸ் போலவே உதவிக்கரமாக அமைந்திடும்.
மைக்ரோசாப்ட் வேர்டில் அறிமுகமாகும் டெக்ஸ்ட் பிரடிக்ட் வசதி!
டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வேர்ட் சாப்ட்வேரில் டெக்ஸ்ட் பிரடிக்ட் வசதியை அடுத்த மாதம் அறிமுகம் செய்கிறது.
மைக்ரோசாப்ட்
ஏற்கனவே கூகுளில் ஜி மெயில் சாப்ட்வேரிலும், அவுட்லுக் சாப்ட்வேரிலும் இந்த வசதிஇடம் பெற்றுள்ளன. இந்தப் புதிய வசதி மூலம், பயனாளர்கள் அதி வேகமாக டைப் செய்திட முடியும் எனக் கருதப்படுகிறது. உங்களின் தகவல்கள் ஒருபோதும் வெளியே கசியாது எனவும் உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியா: பேஸ்புக்கில் ஊடக செய்திகள் பகிர தடை விதிப்பு!