உலக நாடுகளில் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற துரித உணவு (ஃபாஸ்ட் ஃபுட்) கடைதான் மெக்டொனால்ட்ஸ் உணவகம். இந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தலைமை செயல் அலுவலரான ஈஸ்டர் ப்ரூக்கை, நிறுவன தலைமைக் குழு அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும், தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் இவரை விலக்கியுள்ளது.
இவருக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் இனி எந்தவிதமான சம்பந்தமோ, தொடர்போ கிடையாது என நிறுவன தரப்பில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1993 முதல் மெக்டொனால்ட்ஸில் பணியாற்றிவந்தவர் ப்ரூக். இந்நிறுவனத்தின் வரைமுறைகளின்படி, 'ஊழியர்களுடன் எந்தவிதமான உறவும் வைத்திருத்தல் கூடாது. அப்படி இருந்தால் அது நிறுவன வரையறைப்படி குற்றமாகும்' என்று வரையறுக்கப்பட்டுள்ளது.