நாட்டின் மிகப்பெரிய வாகனம் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் செப்டம்பர் காலாண்டு லாபம், எட்டு ஆண்டுகள் காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. பதிவு-காப்பீட்டுக் கட்டணங்கள் உயர்வு, புதிய பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஆகியவை வாகனங்களின் விலை அதிகரிக்கக் காரணமாகியுள்ளன. அதனால், விற்பனை குறைந்து மோட்டார் வாகன துறை நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
எட்டு ஆண்டுகள் காணாத சரிவை கண்ட மாருதி சுஸுகி
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் செப்டம்பர் காலாண்டு லாபம், எட்டு ஆண்டுகள் காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.
மாருதி சுஸுகி
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.43,367 கோடியிலிருந்து சரிந்து, ரூ.34,862 கோடியாகவும், நிகர லாபம் ரூ.4,295.3 கோடியிலிருந்து 35.55 விழுக்காடு குறைந்து ரூ.2,767.9 கோடியாகவும் இருந்தன. அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்துதான் மோட்டார் வாகன துறையின் செயல்பாடு அமையும் என்று நம்பப்படுகிறது.