நாட்டின் மிகப் பெரும் வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, தனது எஸ் பிரஸ்ஸோ ரக வாகனத்தின் ஏற்றுமதியை நேற்று தொடங்கியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய அறிமுகமாக எஸ்-பிரஸ்ஸோ எனும் சிறிய ரக எஸ்யூவி கார் சில தினங்களுக்கு முன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அறிமுகபடுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முதல் 10 கார்களில் ஒன்றாக மாறியுள்ளது.
நம்ம தமிழ்நாடு : தமிழ் மொழியில் கெத்து காட்டும் டைட்டன் நிறுவனம்!
இந்த மினி எஸ்யூவி செப்டம்பர் 30, 2019 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. அக்டோபரில் மட்டும் நிறுவனம் 10 ஆயிரத்து 634 புதிய எஸ்-பிரஸ்ஸோவை விற்பனை செய்துள்ளது. புதிய எஸ்-பிரஸ்ஸோ நிறுவனத்தின் மாருதி சுசுகி அரினா பிரத்யேக விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படுகிறது.
மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ (பின் பக்க அமைப்பு) மேலும், இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 11 நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை மாருதி சுசுகி நிறுவனம் பெற்றுள்ளது. 2020 ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-6 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆப்பிள் கணினியின் விலையா இது? இதுக்கு பென்ஸ் கார் விலையே தேவல!
அதன் விளைவாக இந்த காரில் பிஸ்6-க்கு ஏற்ற 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இந்த காருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. அது அதிகபட்சமாக 67 பிஎச்பி (bhp) உந்துசக்தியை தரும் வல்லமை கொண்டது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வசதி கொண்ட, இந்த காரில் மானுவல், ஏஎம்டி எனும் தானியங்கி கியர்பாக்ஸ் இருக்கும்.
மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ (உள்ளமைப்பு) மேலும், கருப்பு நிற பம்பர், சி- டிசைன் டெயில்லைட், எல்.இ.டி பகல்நேர விளக்குகள், 14 இன்ச் சக்கரம், ஓஆர்விஎம் (ORVM), சில்வர் நிற முன்பக்க க்ரில் ஆகியவை உள்ளன. காரின் உள்ளே கருப்பு டாஸ்போர்ட், முன்பக்க பவர் விண்டோ, இரட்டை ஏர்பேக் ஆகிய அம்சங்கள் பெற்றுள்ளது எஸ்-பிரஸ்ஸோ. ஐந்து பேர் அமர கூடிய இடவசதி கொண்டுள்ளது.
இந்த வாகனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இதுவரை 35,000 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த வேளையில் இந்தியாவில் தயார் செய்யப்பட்ட, இந்தியச் சாலைகளை கவர்ந்த இந்த சிறிய ரக எஸ்யூவி வாகனம் ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஆசியா ஆகிய உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதியை தொடங்கியுள்ளதாக அதன் நிர்வாகத் தலைவர் கெனிசி அயுகவா தெரிவித்துள்ளார்.