தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இனி கூகுள் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப்!

டெல்லி: கூகுள் அசிஸ்டன்ட் மூலம் வாட்ஸ்அப் செயலியிலிருந்து கால் செய்யும் புதிய வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

google assistant whatsapp video call
google assistant whatsapp video call

By

Published : Jul 13, 2020, 3:43 PM IST

இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்கள் என்பது அனைவரும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதுவும் குறிப்பாக, கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நிதிசார்ந்த பரிவத்தனைகளிலிருந்து, ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்திற்கும் பொதுமக்கள் ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், ஸ்மார்ட்போன் பயனாளர்களை கவரும் வகையில் கூகுள் நிறுவனம் அட்டகாசமான வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனி கூகுள் அசிஸ்டன்ட் மூலம் நேரடியாக வட்ஸ்அப் செயலியிலிருந்து வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்ய முடியும்.

இதற்கு முன்பு வரை கூகுள் அசிஸ்டன்ட்டை பயன்படுத்தி ஏர்டெல், ஜியோ போன்ற டெலிகாம் நெட்வொர்க்குகளில் இருந்தே வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும். அதேபோல ஹேங்அவுட்ஸ் மற்றும் கூகுள் டியோ ஆகியவற்றிலிருந்து மட்டும் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். தற்போது இந்த வசதி வாட்ஸ்அப் செயலிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்துவது எப்படி:

  • வாய்ஸ் கால் மேற்கொள்ள - "Make a WhatsApp call to [contact-name]" என்று கூற வேண்டும்
  • வீடியோ கால் மேற்கொள்ள - "Make a WhatsApp video call to [contact- name]" என்று கூற வேண்டும்

இதையும் படிங்க: இந்திய பயனாளர்கள் ஸ்மார்ட்போன்களில் எதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்?

ABOUT THE AUTHOR

...view details