தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கரோனா பணியாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள்: மஹிந்திரா அறிவிப்பு! - மஹிந்திரா கடன் திட்டம்

மும்பை: கரோனா முன்களப் பணியாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

Mahindra
Mahindra

By

Published : May 20, 2020, 2:07 PM IST

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கரோனா முன்களப் பணியாளர்களையும் பெண்களையும் கவரும்வகையில் புதிய கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி,

  • வாகனத்தைப் பெற்று 90 நாள்களுக்குப் பின் அதற்கான இஎம்ஐ (தவணை முறை) தொகையைச் செலுத்தத் தொடங்கலாம்;
  • வாகனத்திற்கான 100 விழுக்காடு கடன் தொகையை நிறுவனமே வழங்கும்; கடனை எட்டு ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தினால் போதும்.

இது குறித்து மஹிந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நெருக்கடியான காலத்தில் மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு மஹிந்திரா வாகனத்தை எளிதாக வாங்க இத்திட்டம் உதவுகிறது.

மருத்துவர்களுக்குப் பிராசசிங் கட்டணம் (செயலாக்கத் தொகை) 50 விழுக்காடு வரை குறைக்கப்படுகிறது. அதேபோல பெண்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜய் நக்ரா கூறுகையில், "வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சமீபத்தில் விற்பனை மற்றும் சேவையில் பல்வேறு டிஜிட்டல் (எண்ம) முறைகளை அறிமுகம் செய்துள்ளோம்" என்றார்.

இந்தப் புதிய திட்டங்களின்படி மஹிந்திரா நிறுவனத்தின் வாகனத்தை வாங்கும் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.1,234-ஐ செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தொடர்ந்து குறைந்த விலையில் சேவை வழங்க இயலாது' - ஏர்டெல்

ABOUT THE AUTHOR

...view details