உலகில் பல பயனாளர்களைக் கைப்பேசி நிறுவனங்கள் புதிய முயற்சிகள் மூலம் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ரியல் மீ நிறுவனமும், ஒப்போ நிறுவனமும் நேருக்கு நேர் விற்பனையில் மோதிக் கொள்கின்றனர். ரியல் மீ XT செல்போன் இன்று மதியம் 12 மணியளவில் பிளிப்காட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒப்போ A9 2020 செல்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பயனாளர்கள் மத்தியில் செல்போன் வாங்குவதில் கடும் போட்டி நிலவும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஒப்போ A5 2020 செல்போன் முக்கிய அம்சங்கள்:
- 6.5 இன்ச் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராஸசர் (Qualcomm Snapdragon 665 SoC)
- அண்ட்ராய்டு 9 பை
- 64 ஜிபி சேமிப்பு வசதி
- 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-கேமரா, 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் ஷூட்டர், 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளிட்ட நான்கு பின்புற கேமராக்கள்
- 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- 5000 mah பேட்டரி
- விலை : 4 ஜிபி மாடல் ரூ. 16,990, 6ஜிபி மாடல் ரூ. 19,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது