தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜஸ்ட் 399 ரூபாயில் தொடங்கும் புதிய 'ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்' திட்டங்கள்!

டெல்லி : ஜியோ நிறுவனம் தனது அடுத்த முயற்சியாக போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ’ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ எனும் புதியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

io
jio

By

Published : Sep 23, 2020, 12:49 AM IST

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏஜிஎம்மில் அறிவித்த ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம் தற்போது அறிமுகமாகியுள்ளது. ஜஸ்ட் 399இல் தொடங்கும் இந்தத் திட்டங்களில் பல்வேறு வகையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

  • நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற பல ஓடிடி தளங்கள் இலவசம்
  • 500ஜிபி டேட்டா, வைஃபை காலிங் வசதி
  • சர்வதேசப் பயணிகளுக்கு விமான நெட்வொர்க் இணைப்பு
  • அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலவச சர்வதேச ரோமிங் வசதி

மேலும், ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் கீழ் மொத்தம் ஐந்துத் திட்டங்கள் உள்ளன. அவை 399 ரூபாயில் தொடங்கி 1,499 ரூபாய் வரை செல்கின்றன. ஒவ்வொரு திட்டத்திலும் பயனர்களின் தேவைக்கேற்ப தனிப்பட்ட சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

இது குறித்து ஜியோவின் இயக்குனர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், "ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்ஸை அறிமுகப்படுத்துவதற்கு இதைவிட சரியான நேரம் இருக்க முடியாது. ப்ரீபெய்ட் ஸ்மார்ட்போன் பிரிவில் 400 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டோம்.

தற்போது, போஸ்ட்பெய்டை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் ஒவ்வொரு போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளரின் தேவைகளையும் மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உயர்தர இணைப்பு, வரம்பற்ற பிரீமியம் பொழுதுபோக்கு, தடையற்ற மற்றும் மலிவு விலையிலான சர்வதேச ரோமிங் வசதி, மேலும் சில புதுமையான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன " என்றார்.

ABOUT THE AUTHOR

...view details