தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

3ஜி சேவைகளுக்கு ஏர்டெல் விரைவில் மூடுவிழா! - 4 ஜி சேவைகள்

டெல்லி: 2020ஆம் ஆண்டுக்குள் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை பிணைய (3ஜி நெட்வொர்க்) சேவையை முற்றிலுமாக நிறுத்தவுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

airtel

By

Published : Aug 3, 2019, 2:36 PM IST

மொபைல் நெட்வொர்க் சேவையில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் கடந்த சில ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை எனப்படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் சேவையில் தொடங்கிய தொழில்நுட்ப வளர்ச்சியானது தற்போது 5ஜி வரை பாய்ச்சல் கண்டுள்ளது.

இந்தியாவின் மொபைல் நெட்வொர்க் சேவையில் ஜியோவின் வருகை, ஒட்டுமொத்த சந்தையைப் புரட்டிப்போடக் கூடிய மாற்றங்களை ஏற்படுத்தியது. மலிவான விலையில் நவீன தொழில்நுட்ப 4ஜி சேவை என்ற வியாபார யுக்தி சக போட்டியாளர்களான ஏர்டெல், வோடாபோன்-ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களைத் திக்குமுக்காடச் செய்தது. அந்தத் தாக்கத்திலிருந்து மேற்கண்ட நிறுவனங்கள் தற்போதுவரை மீண்டு வர முடியவில்லை.

அனைத்து நிறுவனங்களும் 4ஜி தொழில்நுட்பத்துக்கு தங்களைத் தீவிரமாக மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாகவே பாரதி ஏர்டெல் நிறுவனம் தற்போது நாடெங்கிலும் உள்ள 3ஜி சேவையை முற்றிலுமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது.

வரும் 2020க்குள் ஒட்டுமொத்த சேவையையும் 4ஜி தரத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக தற்போது கொல்கத்தா நகரத்தில் 3ஜி சேவையை நிறுத்தியுள்ள ஏர்டெல் வரும் மாதங்களில் இதை அடுத்தடுத்த நகரங்களில் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதன்மூலம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து 3ஜி சேவையும் நிறுத்தம்செய்து 4ஜியாக மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அலுவலர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details