டெல்லி: ஐ.வி.சி.ஏ மாதாந்திர கணக்கின் படி, மே மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம், 58 ஒப்பந்தங்களின் மூலம், 540 கோடி டாலர் முதலீடுகளை பெற்றதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் 460 கோடி டாலர் ஜியோ இயங்குதளத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஜியோ இயங்குதளத்தில் மட்டும் 85% முதலீடு! - Business news in Tamil
மே மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம், 58 ஒப்பந்தங்களின் மூலம், 540 கோடி டாலர் முதலீடுகளைப் பெற்றதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் 460 கோடி டாலர் ஜியோ இயங்குதளத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
Jio
தனியார் பங்கு மற்றும் மூலதன முதலீடு, 2020 மே மாத முழு ஆண்டு காலத்தில் முதலீடுகள் இரட்டிப்பாகி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மே மாதத்தில் ஜியோ இயங்குதளத்திற்கு மட்டும் 460 கோடி டாலர் முதலீடு கிடைத்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த மொத்த முதலீட்டில், 85 விழுக்காடு முதலீட்டை ஜியோ இயங்குதளம் மட்டும் பெற்றுள்ளது. இந்நிறுவனத்திற்கு மொத்தமாக 540 கோடி டாலர் மதிப்பிலான முதலீடுகள் மே மாதத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது.