ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள், தங்களது நேரங்களை செல்போனில் தான் செலவிட்டு வருகின்றனர். தினந்தோறும் டேட்டா குறைவாக உள்ளது என புலம்பும் வாடிக்கையாளர்களுக்காகவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரத்யேகமாக "work from home" திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
'work from home' திட்டம் சிறப்பு அம்சங்கள்
- 151 ரூபாய்க்கு 30 ஜிபி டேட்டா
- 201 ரூபாய்க்கு 40 ஜிபி டேட்டா
- 251 ரூபாய்க்கு 50 ஜிபி டேட்டா
இதுமட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ தனது வருடாந்திர திட்டத்திற்கான விலையை ரூ 2,399 ஆக குறைத்துள்ளது. இத்திட்டத்தில் தினசரி டேட்டா உபயோகிப்பதையும், 2 ஜிபியாக உயர்த்தியுள்ளது. சில நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி சரிவைச் சரிசெய்வதற்காக திட்டத்தின் விலைகளை ஏற்றும்படி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (Telecom Regulatory Authority of India) வலியுறுத்தி வரும் நேரத்தில் ஜியோவின் புதிய திட்டங்கள் அறிவிப்பு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அறிமுகத்துக்கு தயாராகும் சாம்சங் டெபிட் கார்ட்!