தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அமேசானின் இந்த சேவை இலவசம்

ஜியோ ஃபைபர்நெட் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ப்ரைம் சேவை ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Prime
Amazon Prime

By

Published : Jun 12, 2020, 5:46 PM IST

இந்திய டெலிகாம் துறையில் ஜியோ நுழைந்தது முதல் அத்துறையே பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், டெலிகாம் துறையை தொடர்ந்து ஃபைபர்நெட் (Fibernet) சந்தையிலும் ஜியோ கால்பதித்துள்ளது.

இந்தச் சந்தையிலும் வாடிக்கையாளர்களைக் கவர ஜியோ பல்வேறு அதிரடி ஆஃபர்களை அறிவித்துவருகிறது. அதன்படி ஜியோ ஃபைபர்நெட் சேவையில் கோல்ட் அல்லது அதற்கு மேலான பேக்கில் ரீசார்ஜ் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ப்ரைம் சேவை, ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சில்வர் மற்றும் பிரான்ஸ் (Bronze) திட்டத்திலுள்ளவர்கள் கோல்ட் ரிசார்ஜ் திட்டத்திற்கு தங்கள் கணக்கை அப்டேட் செய்வதன் மூலம் அமேசான் இலவச சேவையை பெறலாம்.

வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

  • அமேசான் ஃப்ரைம் வீடியோ (தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும்)
  • அமேசான் ஷாப்பிங் தளத்தில் அதிவேக டெலிவரி
  • இலவச அமேசான் மியூசிக் சேவை
  • ஃப்ரைம் கேமிங்

இதையும் படிங்க: அடுத்த வாரம் தொடங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை?

ABOUT THE AUTHOR

...view details