உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது. அப்போது இணை நிறுவனரான ஜாக் மா பணி ஓய்வு பெறுகிறார் என அறிவிக்கப்பட்டது. ஜாக் மா தனது 55 வயதை நெருங்கிய நிலையில், இன்னும் ஒரு ஆண்டுக்குள் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறஉள்ளார்.
மேலும் 2013 மே 10ஆம் தேதி தலைமை செயல் அலுவலர் பொறுப்பிலிருந்து விலகிய ஜாக் மா ஆறு வருடங்களாக துணை நிறுவனர் பதவியில் இருந்து வருகிறார்.