அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் வெகு தீவிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அந்நாட்டின் முக்கிய நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், கலிஃபோர்னியா ஆகியவற்றில் நாளொன்றுக்கு நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் ஆயிரக்கணக்கானோர்சிகிச்சைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது.
அந்நாட்டில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 11 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 24 மணி நேரத்தில் 225 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் முகக்கவசம், வென்ட்டிலேட்டர் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், அங்குள்ள மருத்துவர்கள் உரிய ஓய்வின்றி தவித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.