நாட்டின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனத்தின் இருபெரும் பங்குதாரர்களான ராகுல் பட்டியாவுக்கும், ராகேஷ் கங்க்வாலுக்கும் இடையே நிறுவனத்தின் நிதி நிர்வாகம் குறித்து கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
நிர்வாகக்குழு எண்ணிக்கையை 10ஆக உயர்த்தியது இண்டிகோ நிறுவனம்
டெல்லி: பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்கலை தீர்க்க இண்டிகோ நிறுவனம் நான்கு சுதந்திர இயக்குநர்களை நியமித்துள்ளது.
அதன் நீட்சியாக சக பங்குதாரரான ராகேஷ் கங்க்வால், இண்டிகோ நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் நிதிநிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இவ்விவகாரத்தில் மத்திய அமைச்சகம் உடனடியாக தலையிட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இந்த பூசலை தீர்க்க இண்டிகோ நிர்வாகம், செபி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் தாமோதரன், ராகுல் பாட்டியாவின் மனைவி ரோஹிணி பாட்டியா, உலக வங்கியின் முன்னாள் நிர்வாகி அனுபம் கன்ஹா, கணக்கர் அனில் பராசர் ஆகிய நான்கு பேரைச் சுதந்திர இயக்குநர் பதவியில் நியமனம் செய்து நிர்வாக குழுவில் இனைத்துள்ளது. இதன் மூலம் நிர்வாக குழுவின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.