தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்திய - சீன எல்லைப் பிரச்னை: சீனப் பொருட்கள் இறக்குமதியில் கடும் சரிவு!

சீன நாட்டிலிருந்து இறக்குமதி குறைந்து வருவதால், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 2019-20ஆம் ஆண்டில் 48.66 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியா சீனா வர்த்தகம்
இந்தியா சீனா வர்த்தகம்

By

Published : Jul 3, 2020, 3:21 AM IST

டெல்லி: 2018- 19ஆம் நிதியாண்டில் சீனாவுக்கான ஏற்றுமதி 16.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி மொத்தம் 65.26 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.

நாடுகளுக்கிடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 2018-19ல் 53.56 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2017-18ல் 63 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.

கடிகாரங்கள், இசைக்கருவிகள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், தளவாடங்கள், மெத்தை, பிளாஸ்டிக், மின் இயந்திரங்கள், மின்னணு உபகரணங்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், உரங்கள், கனிம எரிபொருள்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் முக்கியப் பொருட்களாகும்.

சீனாவிடமிருந்து இறக்குமதியை குறைக்க மத்திய அரசு பல்வேறு தொழில்நுட்ப ஒழுங்கு முறைகளையும் தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தியது.

இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 14 விழுக்காடாகும். முக்கியமாக கைப்பேசிகள், தொலைத் தொடர்பு, மின்சாரம், பிளாஸ்டிக் பொம்மைகள் மற்றும் முக்கியமான மருந்துப் பொருட்கள் போன்ற துறைகளுக்கும் சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், சீனாவிலிருந்து இந்தியாவிற்கு அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) 2019-20ல் 163.78 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துவிட்டது. இதுவே 2018 - 19ஆம் நிதியாண்டில் 229 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

இந்தியா 2017-18 ஆம் ஆண்டில் சீன நாட்டிலிருந்து 350.22 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 2016-17ஆம் ஆண்டில் 277.25 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றது.

ஏப்ரல் 2000 மற்றும் மார்ச் 2020ஆம் ஆண்டுகளில், புதுடெல்லி சீனாவிலிருந்து 2.38 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது.

  • ஆட்டோமொபைல் (987.35 மில்லியன் அமெரிக்க டாலர்),
  • உலோகவியல் (199.28 மில்லியன் அமெரிக்க டாலர்),
  • மின் உபகரணங்கள் (185.33 மில்லியன் அமெரிக்க டாலர்),
  • சேவைகள் (170.18 மில்லியன் அமெரிக்க டாலர்)
  • மின்னணுவியல் (151.56 மில்லியன் அமெரிக்க டாலர்)

ஆகியவை ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2020 வரை, சீனாவிலிருந்து அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டைக் கண்ட சிறந்த துறைகளாகும்.

ABOUT THE AUTHOR

...view details