தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மாயமான காபி கிங்கின் வரலாறு - காஃபே காபி டே

பெங்களூரு: நேற்றிரவு மாயமான 'கஃபே காபி டே' உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தா வாழ்க்கைப் பாதை குறித்த சிறப்பு தொகுப்பு.

coff

By

Published : Jul 30, 2019, 10:50 PM IST

'கஃபே காபி டே' உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தா நேற்றிரவு கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மாயமானார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர். மாயமான சித்தார்த்தாவின் வாழ்க்கைத் தொகுப்பு இதோ,

இளம் வயதில் சித்தார்த்தா

தொடக்க காலம்:

  • கஃபே காபி டே நிறுவனர் சித்தார்தாவின் குடும்பம் 130 வருடங்களாகப் பாரம்பரியமாகக் காபி விற்பனையில் ஈடுபட்டுவருகிறது
  • பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற சித்தார்த்தா, 1983ஆம் ஆண்டு மும்பையில் உள்ள பங்குச்சந்தை நிதி மேலாண்மை சார்ந்த நிதி நிறுவனத்தில் பயிற்சி வேலையாளாக இரண்டாண்டுகள் பணிபுரிந்தார்
  • ஜெர்மானிய நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ட்சிப்போ காபி விற்பனை நிறுவனத்தின் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்ட சித்தார்த்தா, தானும் ஒரு காபி விற்பனை நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டார்
    மனைவியுடன் சித்தார்த்தா

காபி டே-வின் முதல் தடம்

  • 1994ஆம் ஆண்டு ஜூலை 11 - கஃபே காபி டே என்ற பெயரில் முதல் காபி ஷாப்பை திறந்தார்.
  • 1998 - நினைக்க முடியாத விஷயங்கள் ஒரு காபி கப்பின் மூலம் நடைபெறும் என்ற நம்பிக்கை வாசகத்தின் மூலம் தனது நிறுவனத்தை பிரபலப்படுத்தத் தொடங்கினார்.
  • 2000ஆவது ஆண்டு - அந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சி, அதன்மூலம் ஈட்டிய வெற்றி பல்வேறு துறைகளில் சித்தார்த்தா தடம் பதிக்கும் வாய்ப்பை உருவாக்கியது.
  • 2003ஆம் ஆண்டு - எக்கனாமிக்கஸ் டைம்ஸ் சித்தார்த்தாவுக்கு சிறந்த தொழிலதிபர் விருது வழங்கி கௌரவப்படுத்தியது
    சித்தார்த்தாவின் குடும்ப புகைப்படம்

சித்தார்த்தா பெற்ற விருதுகள்

  • 2011ஆம் ஆண்டு - ஃபோர்ப்ஸ் நிறுவனம் இவரை அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர் எனப் போற்றி விருது வழங்கியது
  • 2017ஆம் ஆண்டு - வருமானவரி முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை அவருக்குத் தொடர்புடைய 20 இடங்களில் ரெய்டு நடத்தியது.
    காபி டே ஷாப்

2019ஆம் ஆண்டு ஜூலை 30 - 'எனக்குத் தொழில் ரீதியாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு தொழில் முனைவராக நான் தோல்வியடைந்துவிட்டேன். என்றேனும் ஒருநாள் எனது நிலைமையைப் புரிந்துகொண்டு என்னை மன்னிப்பீர்கள்' எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார் சித்தார்த்தா.

ABOUT THE AUTHOR

...view details