தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்தியப் பொருளாதார தரம் குறித்து மூடீஸ்-இன் பார்வை தவறு! - இந்தியப் பொருளாதார தரம்

பெரும் வளர்ச்சி கண்டு வரும் இந்தியப் பொருளாதார தரம் குறித்து மூடீஸ் நிறுவனம் தவறாக மதிப்பீடு செய்து வருவதாக அரசின் அங்கமான இந்தியா ஐஎன்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

moodys report

By

Published : Nov 9, 2019, 3:16 PM IST

அரசு சார்பில் பொருளாதார மந்த நிலையை மேம்படுத்தப் பல செயல்பாடுகளை தொடர்ந்து நிகழ்த்தி வரும் நிலையில், மூடீஸ் எனும் பொருளாதார குறியீட்டு நிறுவனம் இந்தியாவின் தர மதிப்பீடு கீழ் இறங்கியுள்ளதாகக் கூறியது.

இதற்கு முதன்முதலாக நேற்றுப் பதிலளித்த இந்தியா, தேவையான வளர்ச்சியை நாடு அடைந்து வருவதாகக் கூறியது. இதனைத் தொடர்ந்து, இந்திய அரசின் அங்கமான இந்தியா ஐஎன்சி, இந்தியாவின் பொருளாதாரத்தைக் குறித்து மூடீஸ் நிறுவனம் தவறாக மதிப்பீடு செய்து வருவதாகக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம், இந்தியாவின் மதிப்பீடு குறித்த தனது பார்வையை நிலையான இடத்திலிருந்து, எதிர்மறையான இடத்துக்கு இறக்கிக் கணித்துள்ளதற்கு இந்திய அரசுத் தரப்பில் தனது முதல் எதிர்க்கருத்தை இன்று கூறியிருக்கிறது.

அதில் இந்தியா முக்கியப் பொருளாதார நிலைகளில் நல்ல வளர்ச்சியைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

அதெல்லாம் இல்ல! - இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்துவருகிறது!

ABOUT THE AUTHOR

...view details