ஐஐடி ஹைதராபாத்துக்குச் சொந்தமான ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்யூர் இவி, தனது முதல் அதிவேக மின்சாரம் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு, ETRYST 350 என பெயரிட்டுள்ளனர். இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட இந்த பைக், 120 கி.மீ தொலைவிற்கு ஒரே சார்ஜில் பயணிக்கும் வைக்கும் வகையிலும், 3.5 கிலோவாட் காப்புரிமை பெற்ற பேட்டரியும் கொண்டுள்ளது.
ETRYST 350 மின்சார வாகன துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின், 20 ட்ரையல் வாகனங்கள், குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் நாடு முழுவதும் 2021 மார்ச் இறுதிக்குள் சோதனைக்காக வைக்கப்படவுள்ளது. மேலும், வரும் 2021 ஆகஸ்ட் மாதத்தில், பொதுமக்கள் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதே அம்சங்களைக் கொண்ட வாகனங்களின் விலை தான், ETRYST 350க்கும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் உள்ள பியூர் இவியின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி மையத்தில் ETRYST 350 வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றை சார்ஜில் 120 கிமீ வரை சென்றடையும் தன்மை கொண்டது. இதில், அதிகபட்சமாக 85 கீமி வேகத்தில் செல்ல முடியும்.