கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியிலுள்ள எம்ஜிஆர் நகர் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள், மகன் இருக்கிறனர். பின்பு கவிதாவுடன் இருந்த திருமண உறவை முறித்துக்கொண்டு கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த சவிதா என்ற பெண்ணை இரண்டாவதாக மணந்து வாழ்ந்து வந்தார்.
இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட மனவிரக்தியில் கணவர் தற்கொலை - Husband commits suicide
கரூர் : இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட மன விரக்தியில் கணவர் குடி போதையில் தன்னிலை மறந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட மனவிரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்!
இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. இருப்பினும், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சவிதா பிரிந்து சென்றுள்ளார். இதனால் மன விரக்தியில் மது அருந்திவிட்டு வீட்டின் அருகாமையில் இருந்த மரத்தில் தூக்கிட்டு ஜெகதீசன் தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னதாராபுரம் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.