பிரபலமான ஹோண்டா கார் நிறுவனம், ஷோரூம் விற்பனையை டிஜிட்டல் மையமாக மாற்றும் வகையில் புதிய ஆன்லைன் விற்பனை தளம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் ஷோரூம் செல்லாமல் நேரடியாக ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்.
இந்நிறுவனத்தின் 'ஹோண்டா ஃபுரம் ஹோம்' 'Honda from Home' திட்டத்தில், வாடிக்கையாளர்கள் விருப்பமான தயாரிப்புகளை முதலில் தேர்வுசெய்ய வேண்டும். பின்னர், விருப்பமான டீலர்களைத் தேர்வுசெய்தால் போதும் ஆன்லைனில் முன்பதிவு செய்துவிடலாம்.
இது குறித்து ஹோண்டா நிறுவன துணைத் தலைவரும் இயக்குநருமான ராஜேஷ் கோயல் கூறுகையில்," வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே ஹோண்டா காரை முன்பதிவு செய்யலாம். இந்த முயற்சி கார் விற்பனையை சில்லறை அனுபவத்திலிருந்து டிஜிட்டல்மயமாக்கும் ஒரு பகுதியாகும்" என்றார்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களை தற்போது அறிமுகப்படுத்திய ஆன்லைன் விற்பனை தளத்துடன் ஒருங்கிணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜியோவில் ஃபேஸ்புக் முதலீடு செய்ய உண்மையான காரணம் இதுதானா?