தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நாட்டின் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் 12% உயர்வு - புதிய வேலைவாய்ப்பு

தகவல் தொழில்நுட்பத் துறையின் சிறப்பான பங்களிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது நாட்டின் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் 12 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

புதிய வேலை

By

Published : Apr 9, 2019, 8:26 AM IST

Updated : Apr 9, 2019, 9:39 AM IST

நாட்டில் வேலையின்மை பிரச்னை சில ஆண்டுகளாகவே அதிகரித்துவருகிறது. குறிப்பாக தொழில்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் கோடிக்கணக்கானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக இதுவரை வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பம் எனப்படும் ஐடி சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் தகவல் தொழில் நுட்பத்துறையில் மட்டும் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 38 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக நவ்க்ரி நிறுவனம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் புதிய வேலைவாய்ப்பை கணக்கிடும் அளவீட்டு புள்ளிகள், 2 ஆயிரத்து 129 ஆக இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2 ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது. இது 12 விழுக்காடு வளர்ச்சியாகும்.

மேலும், புதிய வேலைகளை உருவாக்குவதில் மனிதவள மேம்பாடு எனப்படும் ஹெச்.ஆர் (HR) மற்றும் மார்க்கெட்டிங் துறைகள் முறையே 13 விழுக்காடு மற்றும் 12 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளன. புதிய வேலை தேடுவோருக்கான வலைதளமான நவ்க்ரி நிறுவனம் மாதந்தோறும் வேலை உருவாக்கம் குறித்த புள்ளி விவரங்களை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Apr 9, 2019, 9:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details