தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மருத்துவக் காப்பீட்டு கொள்கையில் பயன்தரும் புதிய விதிகள்: அறிந்து கொள்ளுங்கள்! - IRDA new rules

மருத்துவக் காப்பீடு பெறுவோர் டிபிஏ எனும் மூன்றாம் தரப்பு காப்பீட்டு நிர்வாகியை காப்பீடு பெறுவோரே தேர்வு செய்யும் வகையில் கொள்கை விதிகளில் திருத்தம் கொண்டு வந்திருப்பதாக ஐஆர்டிஏஐ அறிவித்துள்ளது.

Health insurance policy new rules  Now you can choose a TPA of your choice  மருத்துவ காப்பீடு புதிய விதிகள்  இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை  ஐஆர்டிஏ புதிய அறிவிப்பு  IRDA new rules  irdai
Health insurance policy new rules

By

Published : Dec 15, 2019, 10:33 AM IST

ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு என்பது மிக அவசியமான ஒன்று தான். திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் தரமான மருத்துவச் சிகிச்சையைப் பெற எல்லோரிடமும் போதிய பண வசதி இருக்காது. எதிர்பாராத, அவசரக் கால மருத்துவச் செலவை எல்லோராலும் ஏற்க முடியாது. எந்த விதமான சிகிச்சை என்றாலும் அனைவராலும் அதற்கான செலவு செய்ய முடியுமா என்றால் அதுவும் முடியாது. எனவே மாத ஊதியம் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் பிறரும் மருத்துவக் காப்பீடு பெறுவதன் அவசியத்தை உணர வேண்டும்.

தற்போது மருத்துவக் காப்பீடு பெறுவோருக்கு பயன்தரும் வகையில் புதிய விதிகளை ஐஆர்டிஏஐ அறிவித்துள்ளது. இதில் டிபிஏவை காப்பீடு பெறுவோரே தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டிபிஏ எனப்படுவது மருத்துவமனைக்கும், காப்பீடு நிறுவனத்துக்கும் இடையிலிருந்து பாலமாகச் செயல்படும் நிறுவனமாகும்.

இந்தியாவின் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள்!

காப்பீடு பெறுவோர், எந்த நிறுவனம் தங்களுக்குச் சேவை அளித்து வருகிறது என்பதை அறியாது, பல இன்னல்களைச் சந்தித்து வந்தனர். இதனைப் போக்க இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏஐ) தரப்பில் புதிய விதிகளை வகுத்துள்ளது.

ஐஆர்டிஏ (மூன்றாம் தரப்பு நிர்வாகிகள் - சுகாதார சேவைகள்) (திருத்தம்) விதிமுறைகள், 2019இன் கீழ், காப்பீட்டை விற்கும் நேரத்தில் பயனாளர்களுக்கு டிபிஏக்களை தேர்வு செய்யும் வகையில் ஒரு பட்டியலை வழங்குமாறு ஐஆர்டிஏஐ அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் மருத்துவ காப்பீட்டைப் பெறுபவர்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப ஒரு டிபிஏ-வை தேர்வு செய்ய இயலும்.

மோசமாக செயல்படுத்தப்படும் அரசின் மருத்துவ திட்டங்கள் - நிதி ஆயோக் ரிப்போர்ட்

மருத்துவக் காப்பீட்டில் டிபிஏ தொடர்பாக ஐஆர்டிஏஐ செய்த மாற்றங்கள் இங்கே:

1) காப்பீடு பெறுவோர் காப்பீட்டாளரால் ஈடுபடுத்தப்பட்ட டிபிஏவிடம் இருந்து, தங்களுக்கு விருப்பமான டிபிஏவைத் தேர்வு செய்யலாம்

2) மருத்துவக் காப்பீடு பெறும்போதோ அல்லது காப்பீட்டைப் புதுப்பிக்கும்போதோ, காப்பீடு நிறுவனம் வழங்கிய பட்டியலிலிருந்து மட்டுமே டிபிஏவைத் தேர்வு செய்ய முடியும்.

3) காப்பீட்டு நிறுவனம் வழங்கிய பட்டியலிலிருந்து எந்த டிபிஏவையும், காப்பீடு பெறுவோர் தேர்வு செய்யாவிட்டால், காப்பீடு நிறுவனமே அவர்களுக்கு டிபிஏவை தேர்வு செய்யும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

4) காப்பீடு பெறுவோர் காப்பீடு நிறுவனத்திடம் எந்தவொரு உரிமை கோரல்களில் ஈடுபடாமல் இருக்க இவ்விதி உரிமையளிக்கிறது.

5) டிபிஏவின் சேவை காப்பீடு பெறுவோருக்கு நிறுத்தப்பட்டால், புதிய டிபிஏவை தேர்வு செய்ய காப்பீடு நிறுவனம் அனுமதியளிக்க வேண்டும்

6) காப்பீடு நிறுவனம் ஒரு டிபிஏ உடன் மட்டும் இணை பங்களிப்புக் கொண்டது எனில், அந்நிறுவனத்தில் காப்பீடு பெறுவோருக்கு வேறு டிபிஏவைத் தேர்ந்தெடுக்க இயலாது.

'வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும்' - நிர்மலா சீதாராமன்

டிபிஏவின் சேவையைத் தொடங்குவதற்கும், நிறுத்துவதற்கும் காப்பீடு நிறுவனத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details