தமிழ்நாடு

tamil nadu

எச்டிஎப்சி வங்கி, வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள ஓர் முக்கிய அறிவிப்பு!

இந்த வருடம் முதல் வாடிக்கையாளர்களின் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.1 % உயர்த்தியுள்ளதாக எச்டிஎப்சி வங்கி தனது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Apr 16, 2019, 11:58 PM IST

Published : Apr 16, 2019, 11:58 PM IST

எச்டிஎப்சி  வங்கி

எப்பொழுதும் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் மட்டுமே வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும். ஆனால் இதுவரையில் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. இருப்பினும் எச்டிஎப்சி இந்த அறிவிப்பை வெளியிட்டு வாடிக்கையாளர்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்த கடன் திட்ட வட்டி விகித உயர்வு, மிதவை வட்டி முறையில், வீடு கடன் பெற்றவர்களின் தவணை செலவு அதிகரிக்கும். மேலும் இந்த வட்டி விகித உயர்வு ஜனவரி முதல் வாரத்திலிருந்தே அமலுக்கு வந்துள்ளது. எச்டிஎப்சி வங்கி நிர்வாகத்தின் இந்த முறையைப் பிற வங்கிகளும் பின்பற்ற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எச்டிஎப்சி வங்கி வழங்கி வந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன், தற்போது 8.95 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது (பெண்களுக்கு 8.90%). 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் தற்போது 9.10 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது (பெண்களுக்கு 9.05%).

ABOUT THE AUTHOR

...view details