நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை (ஜூலை - செப்டம்பர் வரை) ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தாக்கல் செய்துள்ளது. அதில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,345 கோடியாக இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாயும் 14.9 சதவீதம் உயர்வைக் கண்டு, ரூ.13,515 கோடியாக உள்ளது. நடப்பு, சேமிப்பு கணக்குகள் எண்ணிக்கை 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. சேமிப்பு கணக்குகளில் ரூ.2.64 லட்சம் கோடியும், நடப்பு கணக்குகளில் ரூ.1.36 லட்சம் கோடியும் இருப்பு உள்ளது.