லண்டன்: கோவிட்-19 நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் தடுப்பூசிக்கு ஊக்கியாக பயன்படும் துணை மருந்தை 100 கோடி டோஸ் அளவுக்கு தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது கிளாக்ஸோ ஸ்மித் க்ளீன் நிறுவனம்.
இதன் தயாரிப்பை தொடங்கியுள்ளதாக கூறியிருக்கும் நிறுவனம், ஆபத்து காலங்களின் இதன் பயன்பாடு மிக தேவைப்படும் ஒன்றாக இருக்கும். எனவே, இந்த தயாரிப்புக்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து உதவிட வேண்டும் என்று கூறியுள்ளது.